௧௨.வஜ்ராசனம்
 
செய்முறை:
 
.கால்களை  முன் நீட்டி உட்காரவும்.
 
.இடது காலை மடக்கி,நுனிக்கால்கள் மேலிருக்குமாறு புட்டத்திற்கு அடியில் வைக்கவும்.அதே போல்  வலது காலையும் செய்யவும்,
 
.முழங்கால்களை ஒட்டிவைத்து இரு உள்ளங்கைகளையும் விரித்தவாறு முழங்காலின் மேல் வைக்க வேண்டும்.
 
.முதுகை நேராக வைத்து வசதியாக உட்காரவும்.
 
.மூச்சை நன்றாக உள்ளிழுத்து நிறுத்தி நிதானமாக வெளிவிடவும்.
 
.ஒவ்வொரு காலாக வெளிக்கொணர்ந்து முதல் நிலைக்குத் திரும்பவும்.
 
பலன்கள்:
 
.தியானம்,பிராணயாமம் போன்ற பயிற்சிகளை இவ்வாசனத்திலிருந்து செய்யலாம்.
 
.காலிலுள்ள மூட்டுத்  தசைகள் வலுவடைகின்றன.
 
.காலிலுள்ள தசைகள் வலுப்பெறுகிறது.
 
.குடல் சம்பந்தமான கோளாறுகளை அகற்றுகிறது.