உபவிஷ்த கோணாசனம்
 
செய்முறை:
 
.கால்களை நீட்டித் தரையில் அமரவும்.
 
.கால்களை முடிந்த அளவு பக்கவாட்டில் நகர்த்தி வைக்கவும்.
 
.கால் பெருவிரல்களை கைகளால் பற்றிக்கொள்ளவும்.இடது   கால் பேரு விரலை இடது கையாளும்,வலது கால் பெருவிரலை வலது கையாளும் பற்ற வேண்டும்.சுவாசத்தை உள்ளிழுக்கவும்.
 
.பாதங்களை கைகளால் பற்றி மூச்சை வெளியே விட்டு தலையைத் தரையில் பதிக்கவும்.
 
.மார்பைத் தரையில் பதிக்க முயற்சிக்கவும்.இந்நிலையில் சாதாரணமாக மூச்சு விட்டு சுமார் ௫௦ விநாடிகள்   இருக்கவும்.
 
.பின் மெதுவாக ஆரம்ப நிலைக்கு வரவும்.
 
பலன்கள்:
 
.குடல்   இறக்கத்தைச்  சரி செய்கிறது.
 
.பெண்களுக்கு மாதவிடாய்ப் பிரச்சனைகளையும்,பிரசவக்  கோளாறு களையும் சரிசெய்கிறது.
 
.இடுப்பு,கை,கால்கள் வலுப்பெறுகின்றன.