சாம ஆசனம்
 
செய்முறை:
 
.பத்மாசனம் செய்வது போல் வலது காலை இடது தொடையிலும்,இடது காலை வலது தொடையிலும் வைக்கவும்.
 
.உள்ளங்கைகள் மேலே பார்த்தவாறு இடது கை மேல் வலது   கையை   வைக்க வேண்டும்.
 
.முழங்கால் தரையில் பதிய நேராக அமரவும்.
 
.சுமார் ௩௦ விநாடிகள் இதே நிலையிலிருந்து சாதாரணமாக சுவாசிக்கவும்.பின் மெதுவாக ஆரம்ப நிலைக்கு வரவும்.
 
 
பலன்கள்:
.நரம்பு மண்டலம் தூண்டப் படுகிறது.
 
.வயிற்றுப் பகுதிக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.இதனால் ஜீரணசக்தி அதிகரிக்கிறது.
 
.தலைவலி,மலச்சிக்கல் ஆகியவை நீங்குகிறது.
 
.கால்களும்,முதுகுத்தண்டும் பலம் பெறுகின்றன.