பாதபத்மாசனம்
 
செய்முறை:
 
.பத்மாசனத்தில் அமரவும்.
 
.கைகளைக் குறுக்காகப்  பின்னோக்கிக் கொண்டுச் சென்று வலது பக்க  நுனிக்காலை வலது கையாளும்,இடது பக்க நுனிக்காலை இடது பக்க கையாளும் தொடவும்.
 
.தோள்பட்டை எலும்புகள் ஒன்றுடன் ஒன்று சேர்வது போல் கொண்டுவரவும்.
 
.மூச்சை வெளிவிட்டு முன்னால் குனிந்து நெற்றியால் தரையைத் தொடவும்.இதே நிலையிலிருந்து மீண்டு பத்மாசன நிலைக்கு   வரவும்.
 
பலன்கள்:
 
.கை,தோள்பட்டை மற்றும் முதுகுவலிகளைப் போக்குகிறது.
 
.வயிற்றுப் பகுதி மற்றும் மார்புப்பகுதி உள் உறுப்புகளின் இயக்கம் தூண்டப்படுகிறது.
 
.கை,கால்களின் வளையும்   தன்மை கூடுகின்றது.