பர்வதாசனம்
 
செய்முறை:
 
.பத்மாசனத்தில் அமரவும்.
 
.முழங்கால்கள் இரண்டும் தரையிலிருக்கும் படி வைத்து புட்டத்தை உயர்த்தவும்.
 
.கைகளை தலைக்கு மேலே உயர்த்தி உள்ளங்கைகள் வெளியிருக்குமாறு வைக்கவும்.
 
.இந்நிலையில் உபாதையில்லாமல் எவ்வளவு நேரமிருக்க முடியுமோ அவ்வளவு நேரம் இயல்பான சுவாசத்துடன் இருக்கவும்.
 
.மெதுவாக படிப்படியாக ஆரம்ப நிலைக்கு வரவும்
 
பலன்கள்:
 
.இடுப்பு,கால்கள் வலுப்பெறுகின்றன.
 
.விலா எலும்புகள்,தசைகள் உறுதி பெரும்.
 
.தோள்பட்டை வலி,முதுகுத் தண்டு வலி நீங்குகிறது.