௨௧.மூர்த்தாசனம்
 
செய்முறை:
 
.ஒரு மீட்டர் இடை வெளியில் கால்களை வைத்து  முன்னால் குனிந்து தரையில்,தலையையும் கைகள் இரண்டையும் வைக்க வேண்டும். தலை ,கைகள் இரண்டிற்கும் நடுவிலிருக்க வேண்டும்.
 
.தரையிலுள்ள கைகளை எடுத்து ஒரு மணிக்கட்டை இன்னொரு கையால் பிடித்து உடலின் பின்புறம் கைகளை மடக்காமல் வைக்கவும்.
 
.இப்போது அடிக்கால்களை உயர்த்தி நுநிக்காளால் நிற்கவும்.உடலின் எடையை நுநிக்கால்களும்  தலையும் தாங்க  வேண்டும்.
 
.நிற்கும் போது மூச்சை  உள்ளிழுக்கவும்,வளையும் போது மூச்சை வெளிவிடவும்.ஆசனத்தின் இறுதி நிலையில்  சாதரண சுவாசம் மேற்கொள்ளவும்.
 
.இறுதி நிலையில் சிறிது நேரம் இருந்த பின்பு ஆரம்ப நிலைக்கு வரவும்.
 
 
பலன்கள்:
 
.குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது ஏற்ற ஆசனமாகும்.
 
.தலை,கழுத்து மற்றும் கால்கள் வலுப்பெறும்.
 
.தலைக்கு அதிகமான இரத்த  ஓட்டத்தைக் கொடுக்கும்.