.
 
 
.அர்த்த சந்த்ராசனம்                                       
 
செய்முறை:
 
.குப்புறப் படுத்த நிலையில் உள்ளங்கைகளைத்  தரையில் வைத்துஇடது காலை   ஒரு    அடி முன்னால்     எடுத்து வைக்கவும்.
 
.இடது காலுக்கு இரண்டு பக்கமும் கைகள் இருக்க வேண்டும்.
 
.வலது காலை பின்னுக்குத் தள்ளி முழங்கால் மற்றும் நுனி விரல்கள் தரையைத் தொடுவது போல்வைக்கவும்.
 
.முதுகெலும்பை நிமிர்த்தி வளைவு கொடுத்துத் தலையை மடக்கி முகம் மேலே பார்க்க வேண்டும்.
 
.ஆரம்ப நிலையில் மூச்சை வெளியே விட்டு இறுதிநிலையில் மூச்சினை  உள்ளிழுக்கவும்.
 
.இடது காலுக்குப் பதில் வலது காலை முன் வைத்துச் செய்யவும். இதே நிலையில் சிறிது நேரமிருந்து மெதுவாக ஆரம்ப நிலையை அடையவும்.
 
 
பலன்கள்:
 
.கை,கால்கள் வலுப்பெறுகின்றன.
 
.தொப்பைக் குறைகிறது.
 
.தண்டுவடம் சீராகிறது.
 
.ஜீரணசக்தி அதிகரிக்கிறது.